Friday, 27 February 2015

இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்பது என்ன?

பேஸ்புக் நிறுவனம், பெரிய அளவில் இயங்கும் மொபைல் போன் நிறுவனங்களுடனும், சாம்சங் எரிக்சன் மீடியா டெக், நோக்கியா, ஆப்பரா சாப்ட்வேர் மற்றும் குவால்காம் போன்ற மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடனும் இணைந்து, 2013 ஆம் ஆண்டில்,Internet.org என்பதை அறிமுகப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கம், வளரும் நாடுகளில் இணைய சேவைகளை முன்னேற்றமடையச் செய்வதுதான்.

 
இணையம் என்பது நம் வாழ்க்கையின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்றாக மாறிய பின்னர், பல நாடுகளில் மிகக் குறைந்த அளவிலேயே இணைய இணைப்பு பயன்பாடு உள்ளது என்பது, அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதாகும். இலவச இணைப்பினை இந்த நாட்டின் மக்களுக்குத் தரும்போது, இந்த தடையை நீக்குவதாக அமையும். பேஸ்புக் சமூக தளம் இந்த இணைப்பினை வழங்கும்போது, இலவசமாகத் தகவல் பரப்புதல் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு இடையே தொடர்பு அதிகமாகும். இந்த தகவல் ஓட்டமும், மக்கள் இணைப்பும் நிச்சயமாய் நல்ல பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். இதன் மூலம், பேஸ்புக் உலக அளவில் 400 கோடி மக்களை இணைக்க முயற்சிக்கிறது.




இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு என்ன லாபம்?

வளரும் நாடுகளில், இந்த Internet.org முயற்சி மக்களுக்கு ஒரு கவர்ச்சியான விஷயமாகும். இதனால், பேஸ்புக் தளம் மக்களிடையே அதன் இலக்கினையும் தாண்டி வளர்ச்சி அடைகிறது. இந்த முயற்சியின் மூலம், பல வளரும் நாடுகளில் ஆழமாகப் பதிகிறது. இந்த நாடுகள், தகவல் தொழில் நுட்பத்தில் வளரும் நாடுகள் ஆகும்.

இந்த வகையில் இந்தியா, பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் அளவில் வளர்வதற்கான வாய்ப்புகளைத் தருகிறது. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியா உலக அளவில் மூன்றாவது இணையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ 24.3 கோடி பேர் இணையத்தில் உலா வருகின்றனர். இருப்பினும் இந்திய ஜனத்தொகையில் பெரும்பாலானவர்கள், குறிப்பாக கிராமப் புறங்களில் இருப்பவர்களுக்குச் சரியான முறையில், வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதில்லை. கிராமப் புறங்களில் இணையப் பயன்பாடு 19 சதவீதமே உள்ளது என்ற தகவல் இதனை உறுதிப்படுத்துகிறது. ஆனால், சீனா போன்ற நாடுகளில் கிராமப் புற இணையப் பயன்பாடு 46 சதவீதமாக உள்ளது என்ற தகவல், இந்தியாவில் இதை உயர்த்த ஏதாவது முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது.

இதனை உயர்த்த வாய்ப்புகள் இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 14% வளர்ச்சியைத் தற்போது இந்தியப் பயனாளர்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு 40% அதிகரித்து வருகிறது. இது சீனாவிலும், பிரேசில் நாட்டிலும், 25% அளவிலேயே உள்ளது என்ற நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா இணையப் பயன்பாட்டினை அதிகரிக்கலாம் என்பதே, பேஸ்புக் நிறுவனத்தின் திட்டமாக உள்ளது. இதனால், பேஸ்புக் வளர்ச்சி அடைவதுடன், விளம்பரங்கள் சார்ந்த வர்த்தகமும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். பேஸ்புக் தளத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு இது உதவிடும். தற்போது பேஸ்புக் தளத்தின் வருமானத்தில், விளம்பரங்கள் பெரிய அளவில் பங்கெடுத்துள்ளன. விளம்பரதாரர்களுக்கும் இந்த முயற்சி அதிக வாய்ப்புகளை அளிக்கும்.

இந்தியாவில், ஏறத்தாழ 12 கோடி பேர் பயன்படுத்தும் தளமாக பேஸ்புக் வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சியின் அடிப்படையில், உலகிலேயே 100 கோடி பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட தளமாக வளர இதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது.  வரும் நாட்களில், Internet.org பேஸ்புக் தளம் மற்றும் இந்திய இணையப் பயனாளர்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கினைக் கொண்டிருக்கும். இது, மற்ற நாடுகளிலும் இந்த முயற்சியை மேற்கொள்ள பேஸ்புக் தளத்திற்கு உற்சாகத்தினையும் நம்பிக்கையையும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.




எந்த மக்கள் பயனடைவார்கள்?

Internet.org வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் சேவையினைப் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், ஆந்திர மாநிலம், தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலங்களில் இருக்கும் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் முதல் கட்டத்தில் இந்த வசதியினைப் பெறுகிறார்கள். இந்த தொலைதொடர்பு மண்டலங்களில் இயங்கும் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெறலாம் என்றாலும், இந்த திட்டம் இலக்கு வைப்பது, எந்தவித டேட்டா திட்ட இணைய இணைப்பும் இல்லாமல் இருக்கும் கிராமப் புற மக்களைத்தான். இவர்களுடன், இணைய இணைப்பிற்கான திட்டங்களுக்குச் செலவு செய்திட வசதியில்லாமல் இருப்பவர்களையும் இந்த திட்டம் முக்கியமாகக் குறி வைத்துள்ளது. 

இவர்கள் 40 இணைய தளங்களை இலவசமாக அணுகலாம். தங்களுடைய மொபைல் போனில், ஆப்பரா மினி, அல்லது யு.சி. பிரவுசர் மூலம் Internet.org தளத்தை அணுகி, இந்த வசதியைப் பெறும் வழியைப் பெறலாம்.


Friday, 6 February 2015

ஷமிதாப் - விமர்சனம்

தனுஷின் 2வது ஹிந்தி படம் என்ற எதிர்பார்ப்போடு, முதல்முறையாக அமிதாப் பச்சனுடன் தனுஷ் இணைந்து நடித்திருக்கும் படம் என்பதால் ‘ஷமிதாப்’பிற்கு தமிழ்நாட்டிலும் பெரிய எதிர்பார்ப்புதான். ஷமிதாப் சாதித்தார்களா?

கதைக்களம்

எப்படியாவது பாலிவுட்டில் நுழைந்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, பெரிய நடிகராக வேண்டும் என ஆசைப்படும் தனுஷ், தான் பிறந்த ஊரைவிட்டு மும்பைக்கு வருகிறார். அங்கே உதவி இயக்குனராக இருக்கும் அக்ஷராவின் நட்பு கிடைக்க, அவரிடம் தன் திறமையை வெளிப்படுத்துகிறார். தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்தாலும், அவரால் பேச முடியாததால் அவருக்கு யாரும் சான்ஸ் தர மறுக்கிறார்கள்.

இந்நிலையில் தனுஷிற்கு ஆபரேஷன் மூலம் அட்வான்ஸ்டு சென்சார் ஒன்றை தொண்டையில் பொருத்தி, வேறொருவரின் குரல் ஒலியை உள்வாங்கி தனுஷ் தன் குரலாக மாற்றுகின்ற யுக்தியை டாக்டர்கள் மூலம் சாதிக்கிறார்கள். அதன்பிறகு தன் நடிப்புக்கேற்ற ஒவ்வொரு குரலாக தேடி அலையும் தனுஷ், ரோட்டில் குடித்துவிட்டு உளறிக் கொண்டிருக்கும் அமிதாப்பின் வாய்ஸை கேட்டு, அதை தன் குரலாக மாற்ற முடிவு செய்கிறார். பின்னர் தனுஷின் நடிப்பும், அமிதாப்பின் குரலும் இணைய ‘ஷமிதாப்’ என்ற நடிகர் உருவாகி முதல் படமே சூப்பர்ஹிட் ஆகிறது. வெற்றி இரண்டு பேருக்கும் போதையைத்தர அவர்களுக்குள் ‘ஈகோ’ மோதல் உருவாகிறது. ‘ஷமிதாப்’பின் வெற்றிக்கு நான்தான் காரணம் என இருவரும் மல்லுக்கட்ட இறுதியில் என்ன ஆகிறது என்பதே இப்படம்.

படம் பற்றிய அலசல்

இப்படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ‘ஷமிதாப்’பின் டிரைலர் வெளிவந்தபோதே அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும், அதை முழுப்படமாக ரசிக்க ரசிகர்கள் எத்தனை ஆர்வமாக காத்திருந்தார்கள் என்பது தியேட்டரில் காட்சிக்கு காட்சி கிடைத்த கைதட்டல்களிலேயே தெரிந்தது. படத்தின் முதல் அரைமணி நேரத்திற்குப் பிறகே அமிதாப் என்ட்ரி ஆகிறார். அதுவரை தனுஷின் சேட்டைகளை ரசிக்கலாம். அமிதாப்பும், தனுஷும் இணைந்தபிறகு அவர்கள் இருவருக்கிடையேயும் நடக்கும் உரையாடல்கள் ஒவ்வொன்றுமே சுவாரஸ்யமாக பயணிக்கிறது.

முதல்பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம்பாதியில் படம் கொஞ்சம் க்ளிஷேவாக நகர்ந்ததையும் மறுக்க முடியாது. அதேபோல், தான் ஒரு வாய்பேச முடியாதவர் என்பதை என்னதான் வெளியுலகத்திற்கு தெரியாமல் தனுஷ் சமாளித்தாலும், அதில் ‘லாஜிக்’ காணாமல் போவதையும் மறுப்பதற்கில்லை. எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்தான் என்றாலும், அதை அழகாக காட்சிப்படுத்திய பால்கியை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.

படத்திற்கு முதுகெலும்பாக இருந்தது இளையராஜாவின் பின்னணி இசையும், பி.சி.யின் ஒளிப்பதிவும்தான். குறிப்பாக தனுஷ் பேச முடியாத இடங்களில் ராஜாவின் இசை ரசிகர்களிடம் பேசியது.

நடிகர்களின் பங்களிப்பு

அனுபவம் சேரச் சேர நடிப்பு எந்தளவுக்கு மெருகேறும் என்பதற்கு அமிதாப்தான் சரியான உதாரணம். எத்தனை பெரிய சூப்பர்ஸ்டார்... இதுபோன்ற ஒரு கேரக்டரை அசாத்தியமாக ஊதித் தள்ளுகிறாரே என்ற பிரமிப்பு காட்சிக்கு காட்சி ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அமிதாப் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டுமல்ல, அவர் தனுஷிற்கு குரல் கொடுக்கும் காட்சிகளிலும் அமிதாப் பச்சன்தான் நம் கண்களுக்கு புலப்பட்டார். காரணம்... அவரின் கம்பீரக் குரல் ரசிகர்களிடம் இத்தனை ஆண்டுகளாக ஏற்படுத்திய தாக்கம்!

மசாலா படங்கள் என்றாலே தனுஷின் நடிப்பை சிலாக்கிலாம்... இதில் ‘நடிகர்’ கேரக்டர் என்றால் சொல்லவும் வேண்டுமா...? அமிதாப்பிற்கு இணையாக தனுஷிற்கும் வரவேற்பு கிடைத்தது என்றாலே அவரின் நடிப்பு ரசிகர்களுக்கு எத்தனை உற்சாகத்தை கொடுத்திருக்கும் என்பது புரியும். பாதி முகத்தை மறைக்கும் முன் வந்து விழும் தலைமுடி, துறு துறு பூனைக் கண்கள், பளிச் பாடி லாங்குவேஜ், அழகான சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் என அக்ஷராவின் அறிமுகம் அசத்தலாக அமைந்துள்ளது. நிச்சயம் பல உயரங்களைத் தொடுவார்!

பலம்

1. அமிதாப், தனுஷ், அக்ராவின் நடிப்பு
2. தனுஷை அமிதாப் சீண்டும் காட்சிகள்
3. இளையராஜாவின் பின்னணி இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும்

பலவீனம்

1. படம் முழுக்க பேசிக் கொண்டேயிருப்பதால் ஆங்காங்கே நாடகத்தன்மை எட்டிப் பார்ப்பது.
2. ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை அமைப்பு

மொத்தத்தில்...

‘பிக் பி’யுடன் இணைந்து ‘டேலன்ட் டி’ இணைந்து நடித்திருக்கும் ‘ஷமிதாப்’பை அவர்கள் இவருக்காகவும் கண்டிப்பாக கண்டுகளிக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : இருவர் ஆட்டம்!

ரேட்டிங் : 5/10

Wednesday, 4 February 2015

என்னை அறிந்தால் (2015) - எமோஷனல் த்ரில்லர்

 தன் காதல் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் படலத்தில் அஜித் எடுக்கும் பல அவதாரமே என்னை அறிந்தால்.  அஜித்தின் ரசிகர்களை நன்கு அறிந்து, அவர்களுக்கு அஜித்தை எப்படி வழங்க வேண்டுமோ அப்படி வழங்கி ஹாட்ரிக் வெற்றியை அஜித்துக்கு வழங்கி இருக்கிறார் கௌதம்மேனன். அஜித்தின் கேரியரில் என்னை அறிந்தால் மிக பெரிய திருப்புமுனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிங் ஆப் ஓபனிங் என்கிற பட்டதை மீண்டும் தக்க வைத்து உள்ளார் ஆசை நாயகன்.


 சத்யதேவ் (அஜித்) நேர்மையான் காவல் துறை அதிகாரி. அண்டர்கவரில் இருக்கிறார். இந்த பணியில் இருக்கும் போது விக்டர் (அருண் விஜய்) நண்பன் ஆகிறான். சந்தரபவசத்தில் சத்யதேவ் எடுக்கும் சில முயற்சிகளால் விக்டர் காயம் அடைகிறான். வழக்கமான கெளதம் படத்தில் வருவது போல், கடமை தவறாத காப் காதலில் விழுகிறார். வே.விளை போல் டைவர்ஸ் ஆகி பெண் குழந்தையுடன் வசிக்கும் ஹேமானிக்கா (திரிஷா) மீது காதல் கொள்கிறார். திருமணத்தின் போது ஹேமா கொல்ல பட, இந்த கொலைக்கான காரணத்தை தேவ் தேடி போகும் போது பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது வருகிறது. இறுதியில் ஹேமாவின் மரணத்திருக்கு தேவ் பழி வாங்கினாரா இல்லையா என்பதை விறுவிறுப்பாய் சொல்லி இருக்கிறார் கௌதம்மேனன்.



அஜித்: வெள்ளை தலைமுடியுடன் கோட் அணிந்து கெக்கே பிக்கே என்று ஆடிய வீரம் படத்தையே ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள். இதில் இளமையான ஸ்டைலிஷான அஜீத். தாடியுடன் கரடுமுரடான கெட்டப், தாடி இல்லாமல் கறுத்த தலைமுடி மீசையுடன் ஒரு அமுல்பேபி லுக், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாமல் ஒரு அதிரடி தோற்றம். ரசிகர்கள் வலிக்க வலிக்க விசிலடித்தே ஓயப்போகிறார்கள். ஸ்டைல் மட்டும் இல்லாமல் நல்ல தரமான நடிப்பையும் வழங்கி உள்ளார். படத்தின் பாதி பாரத்தை ஒத்தை ஆளாய் தாங்கி பிடித்து இருக்கிறார். கெளதம் போன்ற நல்ல தரமான டைரக்டருடன் அஜித் இணைவது அவரது ரசிகர்களுக்கு மிகவும் நல்லது. காக்க காக்க படத்தில் அஜித் தான் நடித்து இருக்க வேண்டியது, அதில் மிஸ் பண்ணியதை இப்பொழுது மொத்தமாய் பிடித்து இருக்கிறார். 

அருண் விஜய்: வில்லன் கதாபாத்திரம். பொதுவாக பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகரைத்தான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள். இதில், ஹீரோவாக நடித்துவரும் அருண் விஜய்யை வில்லனாக்கியிருக்கிறார் கௌதம். இந்தத் தேர்வே, படத்தில் வருவது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பதை உணர்த்துகிறது. அதற்கேற்ப சிக்ஸ்பேக் வைத்து நாயகனின் நண்பனாக வருகிறார் அருண் விஜய். அவர் ஏன், எப்படி எதிரியாகிறார்? இந்தக் கேள்விகள் உங்களை நிச்சயம் சீட் நுனியில் உட்கார வைக்கும்.



திரிஷா: கெளதமின் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் மிகவும் அழகாக செதுக்க பட்டு இருக்கும். ஹேமானிக்காவும் அதருக்கு விதிவிலக்கு அல்ல. பெண்களை எப்படி காட்சி படுத்த வேண்டும், என்பதில் கெளதம் மகா திறமைசாலி. சமீரா ரெட்டியை கூட மிக அழகாய் காட்டிய கெட்டிக்காரர் கெளதம், திரிஷாவை நன்றாக பயன்படுத்தி உள்ளார். அனுஷ்காவிற்க்கு பெரிய ரோல் இல்லை.

கெளதம்: அஜித்தின் கதாபாத்திரத்தை அறிந்து கொண்டு செம்மையாய் செதுக்கி இருக்கிறார் கௌதம். தனக்கென்று தனி ஸ்டைல் உடையவர். ஸ்டைலிஷான மேக்கிங் அவருக்கு கைவந்த கலை. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்கள் அந்த நடிகர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இல்லாமல் கௌதமின் கிரியேடிவிட்டியுடன் இருந்ததே அதற்கு சான்று. என்னை அறிந்தால் படத்திலும் அந்த முத்திரைதான் மற்ற அஜீத் படங்களிலிருந்து அதனை வேறுபடுத்தி காட்டி இருக்கிறது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா படத்தின் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என்பதில் கௌதமுக்கு உதவியிருக்கிறார்.



கௌதம், ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி. மின்னலேயில் அறிமுகமான இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இசை பங்களிப்பை ஆற்றியுள்ளது. அவர்கள் பிரிந்துபோனது துரதிர்ஷ்டம். இனி ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்று நினைத்தவர்களை என்னை அறிந்தால் ஒன்றிணைத்துள்ளது. நான்கு டியூன்களை வைத்து இன்னும் எத்தனை வருஷங்கள் தான் ஒப்பு எத்துவாரோ. ஆனால் இந்த முறை அதிசியமாய் பின்னணி இசை நன்றாக பொருந்தி இருக்கிறது. 

என்னை அறிந்தால் - எமோஷனல் த்ரில்லர்
review by

hollywoodraj

Tuesday, 3 February 2015

குமுதம்: ஜனவரி - 26, 2015

http://filesflash.net/l7btmfbi

குமுதம்: ஜனவரி - 26, 2015
கவர் ஸ்டோரி
நயனா? ஹன்ஸா? 2015-ல் யார் நம்பர் 1
சினிமா
சிம்புவுடம் நயன் கேட்ட லவ்?
''மனசுக்கு சரின்னு பட்டதைச் செஞ்சேன்!'' -ரஹிமாவான மோனிகா
ஆண்ட்ரியாவுக்கு அடுத்த வருஷம் கல்யாணம்!
விஷால் தயாரிப்பில் நடிக்க மாட்டேன்! http://uploading.com...026-01-2015-pdf

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் காவல் படை தேர்வு

மத்திய அரசின் காலிப்பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவதனால் ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு நம் அனைவராலும் அறியப்படுகிறது. நம் நாட்டின் துணை ராணுவப் படைகளான பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.பி., ஐ.டி.பி.பி., ஏ.ஆர்., என்.ஐ.ஏ., எஸ்.எஸ்.பி., போன்றவற்றில் கான்ஸ்டபிள் பதவிக்கு காலியாக உள்ள 62 ஆயிரத்து 390 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரங்கள்பார்டர் செக்யூரிடி போர்ஸ் படையில் 22 ஆயிரத்து 517ம், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் 5 ஆயிரமும், சி.ஆர்.பி.எப்.,பில் 24 ஆயிரத்து 588ம், சகஸ்ட்ர சீமா பாலில் 6 ஆயிரத்து 224ம், ஐ.டி.பி.பி.,யில் 3 ஆயிரத்து 101ம், அசாம் ரைபிள்சில் 600ம், என்.ஐ.ஏ.,வில் 86ம், எஸ்.எஸ்.எப்.,பில் 274ம் சேர்த்து மொத்தம் 62 ஆயிரத்து 390 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது01.08.2015 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் வாயிலாக ரூ.50/-ஐ செலுத்த வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கி சலான் மூலமாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பிசிக்கல் ஸ்டாண்டர்ட்ஸ் டெஸ்ட், பிசிக்கல் எபீசியன்சி டெஸ்ட் மற்றும் மருத்துவப் பரிசோதனை. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை மற்றும் மதுரை மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க இறுதி நாள்23.02.2015


Monday, 2 February 2015

விண்டோஸ் 10 - ன் 10 சிறப்பு அம்சங்கள்

''விண்டோஸ் இயக்கத்திற்கு இது ஒரு மாபெரும் திருநாள்” என்ற உணர்ச்சிப் பெருக்கான வாசகத்துடன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி நாதெள்ளா, விண்டோஸ் 10 இயக்க முறைமையின், நுகர்வோர் சோதனைப் பதிப்பினை, மக்கள் பார்க்கும் வகையில், ரெட்மண்ட் நகரில் நடைபெற்ற விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமையகத்தில் வெளியிட்டார்.


”விண்டோஸ் சிஸ்டத்தை தேடிப் பெற்ற மக்களிடமிருந்து, விண்டோஸ் சிஸ்டத்தை தேர்ந்தெடுத்து, அதனை நேசிக்கும் மக்களை நோக்கி நாம் நகர்வோம்” என்று விண்டோஸ் சிஸ்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களை நோக்கி அன்பு பெருக்கோடு உரையாற்றினார், நாதெள்ளா. நம் வாழ்க்கை முறையையும், சிந்தனையையும் மாற்றி அமைத்த விண்டோஸ் இயக்கம், இனி, நம் வாழ்வின் சூழ்நிலைகளை மாற்றி அமைக்கும் பணியை, விண்டோஸ் 10 இயக்கத்துடன் தொடங்குகிறது. இந்த உலகிற்கு இன்னும் விண்டோஸ் ஒரு கட்டாயத் தேவையாக இருக்கும்; அது இல்லாமல் உலகு இயங்காது என்பதனை நிரூபிக்கும் வகையில், விண்டோஸ் 10 வருகிறது.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவால் ஆகும். அதனுடைய வெற்றியில் தான், அந்நிறுவனத்தின் எதிர்காலமே உள்ளது. அந்த வகையில், விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் சரியாகவே மேற்கொண்டுள்ளன என்று கூறலாம். பத்தாண்டுகளுக்கு முன்னால், அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும், பெரும்பாலும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், 90% விண்டோஸ் இயக்கமே இயங்கியது. அதன் பின்னர் வந்த ஸ்மார்ட் போன், டேப்ளட் ஆகிய டிஜிட்டல் சாதனங்களில், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்கியதால், டிஜிட்டல் சாதனங்களில் விண்டோஸ் இயக்கத்திற்கான பங்கு 15% ஆகக் குறைந்தது. இதனைச் சரி செய்து உயர்த்தும் பணியில், விண்டோஸ் 10 இயங்கும் எனக் கூறலாம்.

ஏற்கனவே வெளியான தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஏற்படுத்திய தவறுகள் அனைத்தையும் சரி செய்தது. தற்போதைய, நுகர்வோருக்கான சோதனைத் தொகுப்பில், ஆச்சரியப்படத்தக்க வகையில் பல புதிய வசதிகளை நுகர்வோருக்குத் தந்துள்ளது. தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பினைப் பல லட்சம் பேர் சோதனை செய்து தங்கள் பின்னூட்டங்களைத் தந்தனர். இவர்களை முறைப்படுத்துவதற்காகவே, 'விண்டோஸ் இன்சைடர் திட்டம்' ("insiders")என்ற ஒன்றை மைக்ரோசாப்ட் சென்ற ஆண்டில் தொடங்கி, இன்னும் இயக்கிக் கொண்டுள்ளது. இந்த புதிய இயக்க முறைமையின், சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.



இலவசமாய்ப் பெறலாம்:


முதலாவதாக, பலரும் எதிர்பார்த்துக் கேட்டுக் கொண்டது போல, விண்டோஸ் 10 பதிப்பு, விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவோருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை இயக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களையும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்துவிடலாம். கூடுதலாக, விண்டோஸ் 8.1 பயன்படுத்தும் விண்டோஸ் போன்களும், இதே விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்டேட் செய்யப்படும். 
மைக்ரோசாப்ட், 'விண்டோஸ்' என்பது இனி ஒரு சேவையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்த விரிவான தகவல்களை வெளியிடவில்லை.



ஒரே சிஸ்டம்:


ஆப்பிள், ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டத்தினை தன் டெஸ்க்டாப் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகவும், ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தை மொபைல் சாதனங்களுக்காக எனவும் பிரித்து வைத்து இயக்கி வருகிறது. ஆனால், முதன் முதலாக, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்தை, பெர்சனல் கம்ப்யூட்டர் முதல் அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் இயைவானதாகத் தர இருக்கிறது. இவற்றில் இயங்கும் இடை முகங்களும் (Interface) ஏறத்தாழ ஒரே மாதிரியாக அமைய இருக்கின்றன. இதனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10ல் தொடங்கிய வேலையை, போனில் தொடரலாம். அதே போல, போனில் தொடங்கிய வேலையை, டேப்ளட் பி.சி.யில் இயக்கலாம். அனைத்து சாதனங்களையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வரும் இந்த வசதியினை, மைக்ரோசாப்ட் வெகு காலமாக எண்ணி வந்து, இப்போது ஈடேற்றியுள்ளது. 


இதன் மூலம், மொபைல் கம்ப்யூட்டிங் உலகில் கோலோச்சி வரும், கூகுள் ஆதரிக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சிஸ்டங்களின் வாடிக்கையாளர்களைத் தன் பிடிக்குள், விண்டோஸ் சிஸ்டம் மூலம், தன் குடைக்குள் கொண்டு வருகிறது மைக்ரோசாப்ட். இதற்காகவே, உலக அளவில், தன் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தும் 150 கோடி பேர்களுக்கு, புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகப் பெற அனுமதித்துள்ளது.


மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்களுக்கு மட்டுமில்லாமல், வேறு பல சாதனங்களையும் இயக்கும் வகையில் வடிவமைத்து வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் ஹப் (Surface Hub,) மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) ஆகியவையும் இதே சிஸ்டத்தினைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கிறது. இதனால், விண்டோஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஸ்டோர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. வை பி இணைப்பு மூலம், எக்ஸ் பாக்ஸில் உள்ளனவற்றை, கம்ப்யூட்டரில் இயக்கலாம். எதிர் வழியில், மாற்றியும் இயக்கலாம்.

விண்டோஸ் 10 சிஸ்டம் கட்டமைப்பு, புரோகிராம்களை வடிவமைக்கும் டெவலப்பர்கள், ஒரே நேரத்தில், ஸ்மார்ட் போன், டேப்ளட், லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்குத் தங்கள் அப்ளிகேஷன்களை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த அனைத்து சாதனங்களையும் இயக்கும் ஒரே சிஸ்டமாக, மைக்ரோசாப்டின் விண்டோஸ் இருக்கப் போகிறது என இனி அடித்துச் சொல்லலாம்.



ஹலோ கார்டனா!:


மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே வடிவமைத்துள்ள கார்டனா (Cortana digital assistant) விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கார்டனா இப்போது முழுமையாக, செறிவான திறன் பெற்றுள்ளது. மேப்ஸ், ஒன் ட்ரைவ் மற்றும் ஸ்பார்டன் பிரவுசர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நம் டிஜிட்டல் உதவியாளராகச் செயல்படும். நாம் டைப் செய்தோ, அல்லது குரல் வழியாகவோ, பைல் ஒன்றைத் தேடலாம். கார்டனா, இவற்றிலிருந்து நம்மைப்பற்றி நன்கு அறிந்து கொள்ளும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், நமக்கு சில மேம்படுத்தப்பட்ட விஷயங்களைப் பரிந்துரைகளாகத் தரும். 



ஸ்பார்டன் பிரவுசர்:


 தன் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்து வழங்குவதுடன், புதுமையான பிரவுசராக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், ஸ்பார்டன் பிரவுசரை, நவீன தொழில் நுட்பத்தில், புதிய கூடுதல் வசதிகளுடன் மைக்ரோசாப்ட் வடிவமைத்துள்ளது. இதன்படி, ஓர் இணைய தளம் இதில் குறிப்பிடப்படுகையில், அந்த இணையதளப் பக்கத்தினை, அதனுடனான தொடர்புகளுடன் உறைய வைத்து காட்டுகிறது. 

இதனால், தான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, உருவாக்கி, மேம்படுத்தித் தந்த இன்டர்நெட் பிரவுசரை மைக்ரோசாப்ட் விட்டுவிடவில்லை. அதனையும் தன் சிஸ்டத்துடன் தருகிறது. ஆனால், இனி வருங்காலத்தில், இதற்கும் எக்ஸ்பிக்கு நேர்ந்த கதி ஏற்படலாம். முற்றிலும் மறைக்க, மறுக்கப்படலாம்.

 

மொபைல் போனுக்கும் விண்டோஸ் 10: 


போனில் விண்டோஸ் ஒரு முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. புதிய வகையில் போட்டோ, ஸ்கைப், ஆபீஸ் மற்றும் பிற அப்ளிகேஷன்கள் மாற்றப்பட்டு, மேம்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. கீ போர்டினை மாற்றி அமைக்கும் வகையில் தருகிறது. மெசேஜ் அனுப்ப, குரல் வழியினை பயனாளர்கள் மேற்கொள்ளலாம். ஸ்கைப் அப்ளிகேஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், மெசேஜ்கள் தாமாகவே, ஸ்கைப் மூலம் அனுப்பப்படுகின்றன. ஸ்கைப், டயலருடன் இணைக்கப்படுகிறது. போனில் இயங்கும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான ஆபீஸ் அப்ளிகேஷம் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களுடன் கிடைக்கின்றன.



விளையாடும் வசதி: 


போனில் இயங்கும் விண்டோஸ் 10, கேம் விளையாடுவதற்கான வசதிகளை மேம்படுத்துகிறது. இதனுடைய புதிய DirectX 12 அப்ளிகேஷன் புரோகிராமிங் மொழி, விளையாடுவதனை புதிய அனுபவமாகக் காட்டுகிறது. 
 

எக்ஸ்பாக்ஸ்: 



மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பாக்ஸ் (Xbox) அப்ளிகேஷனை, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்துள்ளது. அதே போல, விண்டோஸ் 10 எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோலுடன் இணைக்கப்படுகிறது.



தொடரும் உறவு: 



விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள மிகப் பெரிய வசதி, அதன் தொடரும் உறவு தான். ஆம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களைப் பயன்படுத்தியவர்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பயன்படுத்தும்போது, ஒரு தொடர்ச்சியினை உணர்வார்கள். ஸ்டார்ட் மெனு மீண்டும் தரப்படுகிறது. அதே போல, விண்டோஸ் 8 பயனாளர்கள், அந்த சிஸ்டத்தில் விரும்பியவையும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு அனைத்திற்கும் இசைவான இடைமுகத்தினை மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10ல் Continuum என அழைக்கிறது. 

விண்டோஸ் 10, மவுஸ் மற்றும் கீ போர்டினை உணர்ந்தவுடன், தானாக, பழைய வகை விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஸ்டார்ட் பட்டனுடன் காட்டுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டம் டெஸ்க்டாப்பில் பழகியவர்கள், இரண்டு வகையையும் இயக்கலாம். ஐகான்கள் புதிய உருவினைப் பெற்றுள்ளன. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பெரிய அளவிலான ஐகான்களையும், பழைய ஸ்டார்ட் மெனுவுடன் இயங்குகையில், சிறிய அளவிலான ஐகான்களையும் பெற்று இயக்கலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், அனைவராலும் விருப்பமில்லாமல் இயக்கப்பட்ட சார்ம்ஸ் மெனு (charms menu) விற்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வலது பக்கம் இருந்து ஸ்வைப் செய்தால், புதிய நோட்டிபிகேஷன்ஸ் மெனு கிடைக்கிறது. இதில், பல அப்ளிகேஷன்களுக்கான இயக்க தொடக்கம் முடிவிற்கான விரைவாக இயங்கும் டாகிள் (quick-toggle) பட்டன்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் என்ற நிலைகளுக்கு மாறிக் கொள்ளலாம். வை பி மற்றும் பிற செட்டிங்ஸ் அமைப்புகளையும் இயக்கலாம். செட்டிங்ஸ் மெனுவும், கண்ட்ரோல் பேனலும் புதிய பிரிவில் தரப்படுகின்றன.
 


விரைவான வேகம்!: 


மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை வழங்கும் போதெல்லாம், அது மெமரியில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறதென்றும், அதனால், சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்றும் குற்றச் சாட்டுகள் அடுக்கப்பட்டன. அது உண்மையே. அதனால், மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 7 முதல், இத்தகைய குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக் கொண்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மிகச் சிறியதாக அமைத்து, வேகமாக இயங்கும் வண்ணம் வைத்துக் கொண்டது. விண்டோஸ் 10 சிஸ்டத்திலும், இந்த இலக்கு அழகாக அடையாளம் காணப்பட்டுள்ளது. விண்டோஸ் 8.1 இயக்க வேகத்தைக் காட்டிலும் மட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் ஓ.எஸ்.எக்ஸ். யோஸ்மைட் சிஸ்டத்தைக் காட்டிலும் வேகமாக இயங்கும் வகையில், விண்டோஸ் 10 வடிவமைக்கப்படுகிறது.

விண்டோஸ் 7 முதல் அதன் பின் வந்த அனைத்து சிஸ்டங்கள் இயங்கிய கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 இயங்கும். இதனால், விண்டோஸ் 10 இயக்க, ஹார்ட்வேர் உயர்த்தப்பட வேண்டும் என்ற செலவு பயம் இல்லை. 



அசையாத பாதுகாப்பு:


இதுவரை வெளியிட்ட விண்டோஸ் இயக்க முறைமைகளில், மிகவும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது விண்டோஸ் 10 என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒன் ட்ரைவில் பல கட்டமைப்பு மாறுதல்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒன் ட்ரைவில் சேவ் செய்யப்படும் பைல்கள் போட்டோஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் மியூசிக் அப்ளிகேஷன்களில் இயக்கப்படும். மேலும், போட்டோக்களைப் பொறுத்தவரை டூப்ளிகேட் பைல்கள் தாமாகவே களையப்படும். மிச்சமிருக்கின்ற பைல்கள், மேம்படுத்தப்படும்.


புதிய நவீன தொழில் நுட்பம்:

மேலே கூறப்பட்டவை அனைத்தும் நாம் ஏற்கனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்று வந்தவற்றின் புதிய மாற்றங்கள். இவற்றுடன், முற்றிலும் புதிய பரிமாணங்கள் கொண்ட, நவீன தொழில் நுட்ப சங்கதிகளை, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தருகிறது. அந்த வகையில் முதலில் நாம் சந்திப்பது ஹோலோ லென்ஸ் (HoloLens) மற்றும் சார்ந்த அப்ளிகேஷன்கள் ஆகும். உலகிலேயே முதன் முதலாக, ”ஹோலோ கிராபிக் கம்ப்யூட்டிங் இயக்க மேடையை”, மைக்ரோசாப்ட் அமைக்கிறது. இதன் மூலம், பயனாளர்கள், முப்பரிமாண ஹோலோ கிராம்களை அமைக்கலாம். இதற்கான தலை அணிகலனை மாட்டிக் கொண்டு, விண்டோஸ் 10 சிஸ்டம் வழங்கும் ஹோலோ லென்ஸ் தொழில் நுட்பத்துடன் இணைந்து, ஹோலோ கிராபிக் உருவங்களை, நம் நிஜ உலகில் உலவவிடலாம். 


இது குறித்து உரையாற்றுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் நாதெள்ளா, “இனி ஹோலோகிராம் உருவங்கள், நம் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிடும்” என்றார்.
 


விண் 10-எப்பொழுது எங்கு கிடைக்கும்?:


 சென்ற அக்டோபர், 2014 முதல், விண்டோஸ் 10ன் தொழில் நுட்ப முன்னோட்ட பதிப்பு வெளியானது. அப்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இன்சைடர் (Windows Insider) புரோகிராம் என்ற ஒன்றைத் தொடங்கி, ஆர்வலர்களைப் பதியுமாறு கேட்டுக் கொண்டது. இந்த புரோகிராமில் பதிந்தவர்களுக்கு, வரும் வாரங்களில் விண்டோஸ் 10 நுகர்வோர் சோதனைப் பதிப்பு பயன்படுத்த அனுமதி கிடைக்கும்.

மொபைல் போனில் பயன்படுத்துவதற்கான விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பு வரும் பிப்ரவரியில் கிடைக்கும். 

மொத்தமாகப் பயனாளர் அனைவருக்கும், விண்டோஸ் 10 இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் பயணிகளுக்கு அடித்தது யோகம் : பணம் இல்லாமலே 'டிக்கெட் புக்' செய்யலாம்!

ரயில் பயணிகள், ஆன் - லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இனி, முன் கூட்டியே பணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. முதலில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, டிக்கெட்டை கையில் பெறும் போது, பணம் செலுத்தும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்து தேவையை ரயில்வே துறை பூர்த்தி செய்து வருகிறது. ரயில்வே துறையின் சார்பில் இயங்கும் டிக்கெட் கவுன்டர்கள் தவிர, ஆன் - லைன் முறையிலும் பயணிகள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் வழங்கி வருகிறது.இந்த முறையில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி மட்டுமே இதுவரை டிக்கெட் புக்கிங் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த வசதிகள் இல்லாத நபர்களும் ஆன் - லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, பயண தேதிக்கு, ஐந்து நாட்கள் முன்பாக, பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை ஆன் - லைனில் புக் செய்யலாம். அப்போதே அதற்கான பணம் செலுத்த வேண்டியதில்லை. அதன்பின், பயணியின் முகவரிக்கு, புக் செய்த டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அதை 'டெலிவரி' செய்யும் நபரிடம், டிக்கெட்டுக்கான தொகையுடன், கூடுதலாக சேவைக் கட்டணத்தை செலுத்தி பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுக்கு, பயண டிக்கெட்டை விட கூடுதலாக, 40 ரூபாயும், ஏசி வகுப்பு டிக்கெட்டுக்கு கூடுதலாக, 60 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும்.

'புக்மைட்ரைன் டாட் காம்' என்ற வெப்சைட்டில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் மூலம், கிரெட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பாங்கிங் இல்லாதவர்களும் ஆன் - லைன் முறையில் ரயில் பயண டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சேவையை தற்போதைக்கு, 200 முக்கிய நகரங்களில் வழங்க ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

Yennai Arindhaal Review From Film Distributor & Indian Cinema Magazine Editor in UK



Anandha Vikatan ஆனந்த விகடன் - ஜனவரி 28,2015

Sunday, 1 February 2015

அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்குVivaldi பிரவுசர்

ஒரு பிரவுசரை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது புதிதாக மாற்று பிரவுசரை பயன்படுத்தி பார்க்க நினைத்தாலோ அதற்கான காலம் வந்துவிட்டது. விவால்டி Vivaldi எனும் பெயரில் புதிய பிரவுசர் அறிமுகமாகி உள்ளது. பவர் யூசர் என குறிப்பிடப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு என்ற அடைமொழியுடன் இந்த பிரவுசர் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறந்த பிரவுசர்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ஓபரா பிரவுசரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் சி.இ.ஒ ஜான் வான் டெட்ஸ்னர் தலைமையிலான குழு இந்த புதிய பிரவுசரை உருவாக்கியுள்ளது. பவர் யூசர் எனப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் தேவையை மனதில் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாக விவால்டி குழு தெரிவித்துள்ளது. 

விவால்டியில் இருக்கும் புதிய அம்சங்களாக, இணையத்தில் உலாவும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ’டேப்’களை திறந்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு வசதியாக இந்த டேப்கள் அனைத்தையும் ஒரு தலைப்பின் கீழ் தொகுத்து வைக்கும் வசதி அமைந்துள்ளது. ஆய்வு நோக்கில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும். அதே போல அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை உடனடியாக பயன்படுத்தும் ஸ்பீடு டயல் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இணையத்தை பயன்படுத்தும் போது, பிரவுசரிலெயே அந்த இணையதளங்கள் பற்றி குறிப்பெடுத்து வைக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ஒரு இணையதளத்தை ஏன் பயன்படுத்தினோம் என்பதை எப்போது வேண்டுமானாலும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதே போல குவிக் கமாண்ட்ஸ் மூலம் பல அம்சங்களை உடனடியாக பயன்படுத்தலாம். இவை எல்லாமே இணையத்தை அதிகம் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரவுசர் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருப்பதால் தற்போது தொழில்நுட்ப முன்னோட்ட வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழுவடிவம் அறிமுகமாக உள்ளது