Thursday, 25 April 2013

‘எதிர்நீச்சல்’ படத்தின் முழுக்கதை!


‘3’ படத்திற்குப் பிறகு தனுஷ் முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் படம் தான்‘எதிர்நீச்சல்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் குஞ்சிதபாதம் என்ற கேரக்டரில் வருகிறாராம் சிவகார்த்திகேயன். அதுமட்டுமில்லாமல் இந்த பெயரை பிரதானமாக வைத்துத் தான் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் டைரக்டர் துரை.செந்தில்குமார்.
சரி இனி கதைக்குள் வருவோம்.
பல வருடங்களாக குழந்தை இல்லாமல் ஒரு கோவிலுக்கு சென்று வேண்டுகிறார்கள் சிவகார்த்திகேயனின் அம்மாவும், அப்பாவும்.
அப்படி வேண்டியதால் பிறக்கும் சிவகார்த்திகேயனுக்கு அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் பெயரான ‘குஞ்சிதபாதம்’ என்ற பெயரையே வைக்கிறார்கள்.
ஆனால் சிவகார்த்திகேயன் வளர வளர அவருக்கு அந்தப் பெயர் பிடிக்காமல் போகிறது. ஸ்கூலில் படிக்கும் போது சக நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிண்டலும்,கேலியும் செய்கிறார்கள், இதனால் தனது பெயரை வெளியில் சொல்ல வெட்கப்படும் அவர் எப்படியாவது தனது பெயரை மாற்றி விட வேண்டும் என்று நினைக்கும் பொதெல்லாம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கிறது.
இதனால் பெயரை மாற்றினால் எங்கே தெய்வக்குத்தம் ஆகிவிடுமோ என்று பயந்து போய் அந்த எண்ணத்தை கை விடுகிறார்.
பிறகு கல்லூரிக்கு போகும்போது ஹீரோயின் ப்ரியா ஆனந்த்தின் ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்கிறது. அப்போது அவர் சிவகார்த்திகேயனிடன் பெயரை கேட்கும் போது குஞ்சிதபாதம் என்று சொன்னால் எங்கே அவள் நம்ம சீப்பாக நினைத்து விடுவாளோ..? என்று பயந்து ஹரீஸ் என்று பெயரை மாற்றிச் சொல்கிறார்.
அப்புறம் என்ன..? க்ளைமாக்சில் திருமணம் செய்யும் போது சிவகார்த்திகேயனின் உண்மையான பெயர் குஞ்சிதபாதம் என்று ப்ரியாஆனந்த்துக்கு தெரிய வர, “ ஒருவருடைய திறைமையை வைத்து தான் அவருடைய பெயர் பிரபலமாகிறது. அவருடைய பெயரை வைத்து திறமைகள் மதிக்கப்படுவதில்லை, கிரிக்கெட்டில் சாதனை செய்வதால் தான் சச்சினின் பெயர் பிரபலமானது, அவருடைய பெயரால் கிரிக்கெட் பிரபலமாகவில்லை” என்று சிவகார்த்திகேயனுக்கு ப்ரியா ஆனந்த் அட்வைஸ் செய்வதோடு படம் முடிகிறது.
அதாவது கேலி,கிண்டல்,நக்கல் செய்யக்கூடிய ரேஞ்சில் இருக்கும் தனது பெயரை மாற்ற சிவகார்த்திகேயன் எப்படி 'எதிர்நீச்சல்' போடுகிறார் என்பது தான் இந்த எதிர்நீச்சலாம்.
படம் வருகிற மே 1 - ஆம் தேதி ரிலீஸாகிறது.

No comments:

Post a Comment